Term 2 Week 4 – Announcement – தவணை 2 வாரம் 4 அறிவித்தல்கள்

வகுப்புக்களுக்கான நேர அட்டவணை கீழே காட்டப்பட்டுள்ளது: Class Timetable is as follows:


பேச்சுப் போட்டிக்கான நேர அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது. அத்துடன் பேச்சுப் போட்டிக்கான பின்வரும் விடயங்களை கீழே உள்ள இணைப்பை அழுத்தி எமது இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்;

1. பேச்சும் வாய்மொழித் தொடர்பாடலும் போட்டி விதிமுறைகளும் வழிகாட்டல்களும்

2. பேச்சுப் போட்டிக்கான விடயம் (script)

3. வாய்மொழித் தொடர்பாடலுக்கான மாதிரி வினாக்கள்.

The speech and verbal competition timetable is shown below. Please use the link provided to download the following speech competition-related documents;

1. Speech and verbal competition rules and guidelines

2. Speech materials

3. Sample questions for verbal competition


இந்த வாரத்திற்கான மாணவர் ஒன்று கூடல் பி. ப. 3.00 தொடக்கம் பி. ப. 3.15 வரை இரண்டு வளாகங்களிலும் நடைபெறும். ஒன்றுகூடலுக்கான வகுப்பினை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை அழுத்தி பாடசாலை நாட்காட்டியைப் பார்க்கவும்.

The assembly for this week will be held at both Campuses from 3.00pm to 3.15pm. Please click the link below for the school calendar to find out the class who conducting the assembly.


கடந்த வருட பரிசளிப்பு விழாவுக்கு சமுகம் தராத மாணவர்கள், தங்களது பரிசில்களையும் சான்றிதழ்களையும் 25.05.2024 அன்று GPS வளாகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

The students who have not attended the last year prize giving can collect their trophies and certificates at GPS on 25.05.2024.


நடப்பு வருடத்தின் ஆடி 31ம் திகதி அன்று (July 31st) மூன்றரை அல்லது அதற்கும் கூடிய வயதை எய்தும் சிறார்களை வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையத்தில் சேர்த்துக்கொள்ளலாம். இரண்டு பாடசாலைகளிலும் மாணவர்களைப் பதிவு செய்யலாம்.

Children over three and half year old as of 31st July 2024 are eligible to enroll in the Tamil School. Enrolments will be taking place at both schools.

Girraween Public School (GPS) 9 Bando Rd, Girraween NSW 2145 Entry via Bando Road (GATE 4)

Metella Road Public School (MRPS) 117-131 Metella Rd, Toongabbie, NSW 2146 Entry via Metella Road only

The enrollment process is as follows: Step 1: Visit the WTSC website or click the enrolment link below; Website Link: https://wtsc.ueducateus.com.au/enrolment

Note: Please complete the online enrolment form before visiting the schools. Ensure you have filled all the fields to avoid delay in enrolment.

Step 2: Visit a school in person to complete other processes. Payment Methods:

Note: Students in Year 6 and above (in the mainstream) will be assessed with a simple exam. This exam takes only 15 minutes to understand the students’ competency in the Tamil language in order to be assigned to an appropriate class.

Step 3: New students are directed to their appropriate classrooms.


பெற்றோர்கள், மாணவர்களுக்கான பாடசாலை வசதிக் கட்டணத்தைச் செலுத்தி, பாடசாலை நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

We request parents to pay the school facilities fees to smoothly run the school’s day-to-day activities.


உங்கள் மாணவர்களுக்கு எதாவது விசேட தேவைகள் இருப்பின் அறியத்தரவும்.

Please inform us, if your child has special needs.


இப் பாடசாலை தன்னார்வத் தொண்டர்களால் நடாத்தப்படுகிறது. பெற்றோர்களைத் தாமாக முன்வந்து, தொண்டர்களாக இணைந்து, பாடசாலை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

This school is run by volunteers. We request parents to become as volunteers and engage in school activities.


9.1 அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் “வெல்லும் சொல்”

அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் “வெல்லும் சொல்” போட்டி சம்பந்தமான பின்வரும் தகவல்களைக் கருத்திற்கொண்டு, மேலதிக விபரங்களுக்கு அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தைத் தொடர்பு கொள்ளவும். 1. போட்டி நடைபெறும் நாள் ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 23 ஆம் திகதி (Sun 23rd June 2024).  இவ்வருடப் போட்டிகள் நேர்முகமாகவும் நிகழ்நிலையாகவும் நடாத்தப்படவுள்ளன.

2. விண்ணப்ப முடிவு திகதி:  ஞாயிற்றுக்கிழமை,  ஜூன் 9 ஆம் திகதி (Sun 9th June 2024). விண்ணப்பப் படிவத்தை நிரப்பப் பின்வரும் இணைப்பைப் பாருங்கள். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfRsWObxqpJYt3uKmOQngnrof_b2i6jblDyzMB7fvTfew1Rmg/viewform?usp=sf_link விபரங்கள், ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டாயமாகப் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.

3. இவ்வருட வெல்லும் சொல் போட்டியைப் பற்றிய விபரங்களை உங்களுக்கு அறியத் தருவதற்கு Zoom மூலமாக ஒரு தகவல் பட்டறை (Information Session), ஜூன் 16 ஆம் திகதி மாலை 7 முதல் 8 மணி வரை  (7PM to 8PM on Sun 16th June) நடைபெறவுள்ளது.

தொடர்புகளுக்கு, அபிநயா பிரபாகர் –  0410 974 106 ஜனனி ஜெகன்மோகன் – 0412 430 797 வெல்லும் சொல் 2024 ஒருங்கிணைப்பாளர்கள்.

9.2 சைவ மன்றம் நடாத்தும் திருக்குறள் போட்டி

சைவ மன்றம் நடாத்தும் திருக்குறள் போட்டி 3 பிரிவுகளாக நடாத்தப்படுகிறது. இத் திருக்குறள் மனனத்தேர்வில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள், மேலதிக விபரங்களுக்கு சைவ மன்றத்தினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இத் திருக்குறள் மனன ஒப்புவிப்பு 30.06.2024 நடைபெறும்.

தேர்வுக் கொத்தையும் விபரங்களையும் பின்வரும் இடங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

சிட்னி முருகன் கோயில் கருமபீடம் அல்லது www.sydneymurugan.org.au மேலதிக விபரங்களுக்கு, திரு. சின்னராஜா தணிகைராஜன் – 0421 123 842 சைவ மன்ற பணிப்பாளர் கல்விப் பணிகள் துறை மின்னஞ்சல் : thenujathu@yahoo.com.au


GPS வளாக நடைமுறைகள்:

  • வகுப்புகளுக்குள் நுழைதல்: ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் சென்ற பின்னரே மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்லவேண்டும்.
  • பாடசாலைப் பாவனை: GPS பாடசாலை வளாகத்தில், கட்டட வேலைகள் ஆரம்பத்திருப்பதால், அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மாத்திரம் கவனமாக நடமாடவும், தேவை ஏற்படும்போது தொண்டர்களை அணுகவும்.
  • வாகன நிறுத்தம்: NSW மாநில வீதிப் போக்குவரத்து விதிகள் மற்றும் வீதி ஒழுங்குகளைப் பின்பற்றவும். அயலவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்களை நிறுத்தவும்.
  • உணவு மற்றும் பானம்: வகுப்பறைக்குள் உணவும் பானமும் கொண்டு வருதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

GPS operations and regulations:

  • Classroom Entry: Students should not enter in to the class room without teacher’s presence.
  • School premises usage: Please use the premises cautiously as GPS has started building construction.
  • Parking: Please ensure that you obey NSW street parking rules and exercise common courtesy when parking your car on the street. Ensure you are not causing inconvenience to the neighbors.
  • Food and Drink: No food or drink allowed inside the Classrooms.

MRPS வளாக நடைமுறைகள்:

  • வகுப்புகளுக்குள் நுழைதல்: ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் சென்ற பின்னரே மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்லவேண்டும்.
  • பாடசாலைப் பாவனை: MRPS பாடசாலை வளாகத்தில் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மாத்திரம் நடமாடவும். தேவை ஏற்படும்போது தொண்டர்களை அணுகவும்.
  • வாகன நிறுத்தம்: NSW மாநில வீதிப் போக்குவரத்து விதிகள் மற்றும் வீதி ஒழுங்குகளைப் பின்பற்றவும். அயலவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்களை நிறுத்தவும்.
  • உணவு மற்றும் பானம்: வகுப்பறைக்குள் உணவும் பானமும் கொண்டு வருதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

MRPS operations and regulations:

  • Classroom Entry: Students should not enter in to the class room without teacher’s presence.
  • School premises usage: Parents may face certain restrictions when entering certain blocks inside the school. We kindly ask for your cooperation with our volunteers.
  • Parking: Please ensure that you obey NSW street parking rules and exercise common courtesy when parking your car on the street. Ensure you are not causing inconvenience to the neighbors.
  • Food and Drink: No food or drink allowed inside the Classrooms.

நிர்வாகக் குழு / Administration வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம் Wentworthville Tamil Study Centre.